நிந்தவூரைச் சேர்ந்த ILM.இப்ராஹிம் சேர்(கபூர் சேர்) தனது 63வது வயதிலும் 02 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்!
12th Annual Master Athletic Championship-2026 12வது வருடாந்த மாஸ்டர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்-2026 இப்போட்டிகள் யாவும் இம்மாதம் 23,24 ஆகிய திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டிகளில் 60 - 64 வயதுப் பிரிவு ஆண்களுக்கான போட்டியில் நிந்தவூர் மண் சார்பாக கலந்துகொண்டு 2 வெண்கலப் பதக்கங்களை இவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை கல்வி வலய முன்னாள் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆலோசகர் அல் ஹாஜ்,- ILM. I brahim Sir (Gafoor Sir) அவர்கள்
300M தடைதாண்டல் ஓட்டத்தில் 3ஆம் இடம் மற்றும் 200M ஓட்ட நிகழ்ச்சியில் 3ஆம் இடம் பெற்று இரு வெண்கலப் பதக்கம் வென்று எமது நிந்தவூருக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இப்ராஹிம் சார் அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
