Type Here to Get Search Results !
Developed by Cleverbit

குழந்தையைத் தொடாமல் ஆரோக்கியத்தை கண்டறியும் AI தொழில்நுட்பம்; எவ்வாறு பயன்படுத்துவது?


பிறந்த குழந்தைகளின் முக்கிய சுகாதார அளவீடுகளை மதிப்பீடு செய்வதற்காக ஆந்திரப் பிரதேச மாநில அரசு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.


சிஷு மாபன் (Shishu Maapan) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய செயலியின் மூலம், குழந்தையைத் தொடாமலேயே அவர்களின் உடல்நிலையைக் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கைத்தொலைபேசி காணொளி (Mobile Video) மூலம் குழந்தையின் எடை, உயரம், தலை மற்றும் மார்புச் சுற்றளவு போன்ற முக்கிய அளவீடுகளை இந்தச் செயலி வாயிலாகத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியும் என அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads