Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு அதிகரிக்கும் ஆபத்து, 2035-க்குள் உயிரிழப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கை; விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள திடுக்கிடும் உண்மை!


உலகம் முழுவதும் ரொக்கட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களின் ஏவுதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு ஏற்படும் ஆபத்தும் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


விண்வெளியில் சுற்றிவரும் செயலிழந்த செயற்கைக்கோள்கள், ரொக்கட் பாகங்கள் மற்றும் பிற கழிவுகள் காரணமாக, வாரத்திற்கு சராசரியாக சுமார் ஒரு மெட்ரிக் டன் எடையுள்ள விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.


ஏற்கனவே கென்யா, அமெரிக்கா, போலந்து உள்ளிட்ட பல நாடுகளில் ரொக்கட் பாகங்கள் மற்றும் செயற்கைக்கோள் கழிவுகள் பூமியில் விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், சில இடங்களில் அவை சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலைமை தொடருமானால், 2035-ஆம் ஆண்டிற்குள் விண்வெளிக் குப்பைகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் விழும் அபாயம் மேலும் அதிகரித்து, மனித உயிரிழப்புகள் ஏற்படும் சாத்தியம் உருவாகலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


இதனையடுத்து, விண்வெளிக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதும், எதிர்கால விண்வெளி நடவடிக்கைகளில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

@CM

Tags

ads