21 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் இடைக்கிடையே பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
@CM
