Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் M.J.பாத்திமா அனத் ஜிதா 166 புள்ளிகளைப் பெற்று நிந்தவூர் கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை!


2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், நிந்தவூர் கோட்டத்தில் 166 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை மாணவி MOHAMED JALEEL FATHIMA ANATH JIDAH பெற்றுள்ளார்.


நிந்தவூர் KM/KM/Al-Mazhar Girls' High School மாணவியான இவர், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேற்றை பதிவு செய்துள்ளார்.


மாவட்ட அடிப்படையிலான வெட்டுப்புள்ளி 133 ஆக காணப்பட்ட நிலையில், மாணவி 166 புள்ளிகளைப் பெற்று வெட்டுப்புள்ளியை விட 33 புள்ளிகள் அதிகமாக பெற்றுள்ளார்.


இந்த சிறப்பான பெறுபேறு மாணவியின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கல்வித் திறமைக்கு கிடைத்துள்ள சிறந்த அங்கீகாரமாக அமைந்துள்ளது.


அத்துடன், இச்சாதனை மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகம் மற்றும் நிந்தவூர் கல்விச் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.


இம்மாணவிக்கு CITIZEN MEDIA சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM 

ads