Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, இன்று (30) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


புதிய விலைத் திருத்தங்களின்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூ.414.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


அத்துடன், ஒட்டோ டீசல் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 392.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு சுப்பர் டீசல் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 528.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ரூ.475.00 விலையிலும் மண்ணெண்ணெய் ரூ. 285.00 ஆகிய விலைகளிலும் மாற்றமில்லாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


@CM

Tags

ads