Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!


மருந்துகளின் விலைகளில் எதிர்வரும் காலத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   


தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.  


தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.   


இதன்படி, சில மருந்துகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும், சில மருந்துகளின் விலைகள் குறையக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.  


இதனிடையே, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஊடாக மாலைதீவுகளுக்கும் மருந்துகளை விநியோகிக்கும் திறன் இலங்கைக்கு இருப்பதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


@CM

Tags

ads