Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ஒரு மணி நேர மின் விநியோகத் தடை இனியும் தொடருமா? அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!


தற்போது அமுலில் உள்ள ஒரு மணி நேர மின் விநியோகத் தடையைத் தொடர்ந்து நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


கடந்த மூன்று நாட்களாக அமுல்படுத்தப்பட்டு வரும் மின் விநியோகத் தடை தொடருமா என்பது தொடர்பில் எமது செய்திச் சேவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வினவியபோதே, அதன் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான கோரிக்கை தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனத்தினால் இதுவரை முன்வைக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், அவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், நாடளாவிய ரீதியில் இன்றும் தலா ஒரு மணி நேர மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.


நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு, கட்டம் கட்டமாக ஒரு மணி நேர மின் விநியோகத் தடையை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.


தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


இதன்படி, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் இந்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுகிறது.


@CM

Tags

ads