Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அட்டாளைச்சேனை மற்றும் பனங்காடு பிரதேச வைத்தியசாலைகளுக்கு பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விஜயம்!

 


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை மற்றும் பனங்காடு பிரதேச வைத்தியசாலைகளில் நடைபெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைக் கண்காணிப்பதற்காகவும் பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்துகொள்வதற்காகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை (16) குறித்த வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

(றியாஸ் ஆதம் )




அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ள பிராந்திய மருந்து விநியோக பிரிவின் வேலைத்திட்டங்களையும் பணிப்பாளர் மற்றும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உள்ளிட்ட குழுவினர் இதன்போது பார்வையிட்டனர்.


குறித்த வைத்தியசாலைகளில் நடைபெறுகின்ற கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.



Tags

ads