Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அவர்களினால் டெனிஸ் மைதானம் திறந்து வைக்கப்பு!

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் திரு.தமயந்த விஜயஶ்ரீ (DIG) அவர்களின் வழிகாட்டலில் கீழ் கடந்த 09/09/2023 சனிக்கிழமை அம்பாறை செனரத் சோமரத்ன மைதானத்தில் டெனிஸ்க்கு என தனி மைதானம் ஒன்று அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் தலைவர் அவர்களும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் Dr. திலக் ராஜபக்ச அவர்களும் மற்றும் கல்வி அதிகாரிகள்,இராணுவ உயர் அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள்,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மாணவர்கள்,பெற்றோர்கள் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இப் பிராந்தியத்தில் அதிகூடிய டெனிஸ் மைதானங்களை அமைக்கும் பணியில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் திரு.தமயந்த விஜயஶ்ரீ (DIG) அவர்கள் ஈடுபடுவது பாராட்டத்தக்க விடயமாகும் 


இவ்வாறான டெனிஸ் மைதானம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திலும் அமைக்கப்பட்டு இருக்கின்றது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

ads