Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக கிண்ணியாவில் அமைதிப் பேரணி.




பலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இஸ்ரேலின் மிலேச்ச தனமானா அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் கண்டிக்கும் வகையிலும் கிண்ணியாவின் நகரசபை மைதானதில் அமைதிப் பேரணி ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த அமைதிப் பேரணியானது கிண்ணியாவின் சகல பள்ளிவாயல்கள் சம்மேலனம் மற்றும் பொதுமக்களும் இணைந்து கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களையும், பதாதைகளையும் ஏந்திய வண்ணம் அவர்களின் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

இந்த பேரணியானது இன்று ஜும்மா தொழுகையின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு பலஸ்தீனிய மக்களுக்காகவும், சமாதானத்திற்காகவும் வேண்டி விஷேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.மேலும் சர்வதேச மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு மொழிகளிலும் விஷேட உரைகள் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Tags

ads