Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கல்முனையில் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்



(எம்.என். எம்.அப்ராஸ்) 

பலஸ்தீன் மக்களுக்காக ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்,பேரணி கல்முனையில் இன்று(03)இடம்பெற்றது. 

ஜும்ஆத் தொழுகையைத்தொடர்ந்து கல்முனை முகைதீன் ஜும்மாபள்ளிவாசல் அருகில் உலமாக்கள்,கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்களின் நிருவாகிகள்,கல்முனை பொது அமைப்புக்கள், பெருமளவிலான பொது மக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு இஸ்ரேலின் கொடூரத்தாக்குதலைக் கண்டித்து பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன்,மேலும் கண்டன பேருரை மற்றும் பலஸ்தீன மக்களுக்காக துஆ பிராத்தனையும் இதன் போது இடம்பெற்றது.

Tags

ads