Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் துணைத் தலைவராக ( முன்னாள் இராஜாங்க அமைச்சர் ) கௌரவ பா.உ பைசல் காசிம் தெரிவு

 



பாராளுமன்ற வளாகத்தில் இன்று (07.12.2023) இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. இவ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் சங்கத்தின் துணைத் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இம் முன்னெடுப்பானது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான முக்கிய நகர்வாகும். மேலும் இந்நிகழ்வில் இலங்கைக்கான மாலைதீவின் பிரதி உயர்ஸ்தானிகர் அதிமேதகு. திருமதி பாத்திமா கினா, இலங்கை பாராளுமன்ற கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந் நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், சங்கத்தின் நிறைவான செயற்பாட்டினை அடைவதற்காக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


துணைத் தலைவர்கள்:

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் #பைசல்_காசிம்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க


செயலாளர்:

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் டெனிபிட்டிய


துணை செயலாளர்:

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் அடைக்கலநாதன்


பொருளாளர்:

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்


Tags

ads