Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கணவரை பிரிவதாக அறிவித்தார் ஏ.ஆர்.ரஹ்மானின் பேஸ் ப்ளேயர்!


பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியைப் பிரிவதாக அறிவித்த செய்தி இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் குழுவில் உள்ள பேஸ் ப்ளேயர் (Bass) player) மோகினி டே, தனது கணவரைப் பிரிவதாக தற்போது அறிவித்து இருக்கிறார்.


அவர் தனது சமூக வலைத்தள பதிவில்,


"கனத்த இதயத்துடன், நானும் எனது கணவர் மார்க்கும் பிரிந்துவிட்டோம்.


எங்கள் இருவரிடையே ஏற்பட்ட சில கருத்து முரண்பாடுகள் காரணமாக பிரிந்து செல்வதுதான் சிறந்த வழி என்று நாங்கள் இருவரும் முடிவு செய்துள்ளோம்."


"MaMoGi மற்றும் Mohini Dey குழுக்கள் உட்படப் பல திட்டங்களில் நாங்கள் இன்னும் இணைந்து பணியாற்றவுள்ளளோம். 


நாங்கள் எப்போதும் ஒன்றாக வேலை செய்வதில் பெருமை கொள்கிறோம்.


அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது.


எங்களுக்கு இரசிகர்களாகிய நீங்கள் வழங்கிய அனைத்து விதமான ஆதரவுக்கும் நன்றி.


இந்த நேரத்தில் எங்கள் முடிவை மதிக்கவும், தனியுரிமையை எங்களுக்குத் வழங்கவும் இரசிகர்களாகிய உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என மோகினி டே தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


@CM

Tags

ads