Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூரின் வரலாற்று சாதனையாளர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் விசேட கௌரவிப்பு!


கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 53வது சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024 நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை சார்பாக 12 வயதுப்பிரிவைச் சேர்ந்த Mohamed Haris Mohamed Hinzan ஓட்டப்பந்தயம் 80M நிகழ்ச்சியில் 11.00 Sec

மற்றும் ஓட்டப்பந்தயம் 100M நிகழ்ச்சியில் 14.00 Sec வினாடியில் ஓடி முடித்து இரு நிகழ்ச்சியிலும் 03ம் இடத்தைப் பெற்று இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

அதேவேளை,13 வயதுப்பிரிவைச் சேர்ந்த Nihal Ahamed Sibny Ahamed ஓட்டப்பந்தயம் 100M நிகழ்ச்சியில் 13.30 Sec ஓடி முடித்து திறமைச்சான்றிதழ் வென்றிருந்தார் .


மேலும் இவர்களை கௌரவிக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோரினால் சாதனையாளர்களை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.


@CM

Tags

ads