Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

விண்வெளியில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்!

Top Post Ad


விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) உள்ளிட்ட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க வீராங்கனையான விண்வெளி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார்.


கடந்த வருடம் ஜூன் மாதம் விண்வெளிக்குச் சென்ற அவர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்குத் திரும்ப முடியாமல் உள்ளார்.


எதிர்வரும் மார்ச் மாதம் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், பூமிக்கு மேல் 400 கிலோ மீற்றர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் - 72 குழுவினர்,


பூமியைச் சுற்றி வரும்போது 2025ஆம் ஆண்டு பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும், அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads