இணைவழி ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் அமைப்பு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
ஜூலை 3 ஆம் திகதி முதல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சேவைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை செயலிழந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிழப்பை மீளமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
@CM