Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!


அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


இதேவேளை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 முக்கிய குளங்களில் 49 குளங்கள் நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மல்வத்து நிலப்பகுதிகளில் வெள்ளப் வாய்ப்புள்ளதாக ஓயாவின் பெருக்கு தாழ் சிறியளவான ஏற்பட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக, 2 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.


இதன்படி, அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.


அத்துடன் குருநாகல், பதுளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.


@CM

Tags

ads