Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ஜனாதிபதியின் சீன விஜயம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது; சீன வெளிவிவகார அமைச்சு!


இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் முதல் சீனப் பயணம், இருதரப்பு உறவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


சீனாவில் செய்தியாளர் சந்திப்பொன்றில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன் யிங், இதனைக் குறிப்பிட்டார்.


சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், எதிர்வரும் 14 ஆம் திகதி, சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீனா ஜனாதிபதி ബി ஜின்பிங் உடன் கலந்துரையாடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், பிரதமர் லி கியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் ஸாவோ லெஜி ஆகியோரையும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்திப்பார் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன் யிங் குறிப்பிட்டுள்ளார்.


@CM

Tags

ads