Type Here to Get Search Results !
Developed by Cleverbit

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!


நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவுவேளையில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதன்படி, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென குறிப்பிடப்படுகின்றது.


அத்தோடு இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


@CM

Tags

ads