நிந்தவூரைச் சேர்ந்த டாக்டர் பாரிஸ் அஹமட் ஷெரீப் (Consultant Sport & Exercise Medicine Physician) அவர்கள், வரவிருக்கும் ஆசியா இளைஞர் விளையாட்டு போட்டி 2025 (Asian Youth Games 2025)க்கான பிரதான மருத்துவ அதிகாரி (Chief Medical Officer)யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போட்டி எதிர்வரும் அக்டோபர் 20ஆம் திகதி முதல் இரண்டு வாரங்கள் பஹ்ரைன் நாட்டில் நடைபெறவுள்ளது. ஆசிய நாடுகள் பங்கேற்கும் சுமார் 110 வகையான போட்டிகளுக்கான மருத்துவப் பொறுப்பை அவர் தலைமை தாங்கவுள்ளார் என்பது பெருமைக்குரிய நிகழ்வாகும்.
குறிப்பாக, இப்போட்டியில் நிந்தவூரைச் சேர்ந்த கபடி கழக வீரர்கள் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர் என்பது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.
தற்போது, டாக்டர் பாரிஸ் அஹமட் ஷெரீப் அவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் Chief Sports Medicine Physician Consultant ஆகப் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னர், நிந்தவூரின் முக்கியமான விளையாட்டு கழகமான Kent Sports Club யின் முன்னாள் கால்பந்து அணித் தலைவராக விளங்கிய இவர், தற்போது அந்தக் கழகத்தின் போஷகராக இருந்து வழிநடத்தி வருகிறார்.
இந்நியமனம், நிந்தவூருக்கு பெருமை சேர்த்துள்ளது. பஹ்ரைன் நாட்டில் அவர் தனது கடமைகளை திறம்படச் செய்வதற்கு சிடிசன் மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
@CM