Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைப்பழக்கம் - மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!


பாடசாலை மாணவர்களிடையே, புகைபிடித்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பேராதனை போதனா மருத்துவமனையின் சுவாசப்பிரிவு மருத்துவ நிபுணர் துமிந்த யசரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். 

 

அவர்களில், 14 அல்லது 15 வயதினரிடையே , சிகரெட் புகைப்பிடிக்கும் பழக்கம் ஆரம்பித்துள்ளதாக மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 

இளம் வயதினரிடையே புகைபிடித்தல், நுரையீரல் தொடர்பான நோய்களின் அதிகரிப்பிற்கு பாரிய பங்களிக்கும் என்றும் மருத்துவ நிபுணர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads