Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உதவி பொலிஸ் பரிசோதகர் KLM.முஸ்தபா அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் கட்டளையின் பிரகாரம் ஒரு விசேட கடமைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதற்காக பணிக்கப்பட்டார். அவரது 3 மாத கால விசேட கடமை முடிவடைந்ததன் காரணமாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் மீண்டும் அவரது கடமையை புரிவதற்காக செல்கிறார்.

 


உதவி பொலிஸ் பரிசோதகர் KLM.முஸ்தபா கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற வேலையில் அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் கட்டளையின் பிரகாரம் ஒரு விசேட கடைமைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதற்காக பணிக்கப்பட்டார்.


 இவர் 2025.11.01ஆம் திகதி நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதற்காக வருகை தந்தவர் 2026.01.30ஆம் திகதி வரை சுமார் 3 மாத கால விசேட கடமையை மேற்கொண்ட போது நிந்தவூரில் இடம்பெற்று வந்த அதிகமான போதை வஸ்து நடவடிக்கைகள், திருட்டு சம்பவங்கள் தொடர்பாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவருடைய இம், 3 மாத கால விசேட கடமை முடிவடைந்ததன் காரணமாக கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அகார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் பொலிஸ் அத்தியட்சகர்

KLM.முஸ்தபா கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு மீண்டும் அவரது கடமையை புரிவதற்காக செல்கிறார்.


இவர் இம் 3 மாத காலத்தில் நிந்தவூருக்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

Tags

ads