Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வாகன இறக்குமதி குறித்து வெளியான அதிரடி அறிக்கை!


2025ஆம் ஆண்டில் இலங்கையின் வாகன இறக்குமதிச் செலவு 2 பில்லியன் டொலரைக் கடந்துள்ளது. 

 

டிசம்பர் மாத தரவுகளுக்கு அமைய, இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை அறிவித்துள்ளது. 

 

2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாத்திரம் தனிப்பட்ட மற்றும் வணிக தேவைகளுக்காக 301 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 


இதற்கமைய, 2025ஆம் ஆண்டில் மொத்த வாகன இறக்குமதி செலவு 2.047 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. 


2025 ஆம் ஆண்டுக்கான மொத்த வாகன இறக்குமதியில், தனிப்பட்ட பாவனைக்கான வாகன இறக்குமதிக்காக மாத்திரம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.


@CM

Tags

ads