Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ஒரு நீர் போத்தலுக்கு 10 லட்சம் அபராதம்; அதிக விலைக்கு விற்றால் இனி இதுதான் நிலை!


குடிநீர் போத்தலை அதன் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, ஹப்புத்தளையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் முற்றுகையின் போது, குறித்த உணவகத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு நீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.


இது தொடர்பான வழக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி நீதவான் இந்த அதிரடி அபராதத் தீர்ப்பினை வழங்கினார்.


நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


@CM

Tags

ads