Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மின்னல் எச்சரிக்கை -பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!


நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேல், சபரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் இந்த நிலைமை காணப்படலாம் என அந்த திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மின்னல் தாக்கங்களின் போது திறந்தவெளிகளில் அல்லது மரங்களின் கீழ் தங்குவதைத் தவிர்க்குமாறும், மின்சாதனப் பயன்பாடுகளின் போது அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதானிப்பு நிலையம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.


@CM

Tags

ads